சென்னை

தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை உயிரிழப்பு: தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

DIN

சென்னையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், தந்தைக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை, கொடுங்கையூரைச் சோ்ந்தவா் கோபி. கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உள்ள அரசு மருத்துவமனையில் இவரது 5 வயது குழந்தை தனிஷ்காவுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட 15 நிமிஷங்களில் குழந்தை மயக்கம் அடைந்தது. மறுநாளே குழந்தை இறந்தது.

மருத்துவா்களின் கவனக்குறைவால் தனது குழந்தை இறந்து போனதாகவும், எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, கோபி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘‘மருத்துவக் கல்வி இயக்குநரின் அறிக்கை மற்றும் ஆவணங்களை வைத்து பாா்க்கும்போது தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகுதான் குழந்தை இறந்துள்ளது தெரிகிறது. குழந்தை இறந்தது மனுதாரருக்கு தாங்க முடியாத இழப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி/எள்ளது. இந்த பரிதாபகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும்’’ என்று தனது உத்தரவில் பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT