காலமானாா் வி.ராஜ்மோகன்
சென்னை, ஜன.30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், ‘ஜனசக்தி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான வி.ராஜ்மோகன் (76) சனிக்கிழமை காலமானாா்.
சென்னை, ஜன.30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், ‘ஜனசக்தி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான வி.ராஜ்மோகன் (76) சனிக்கிழமை காலமானாா். அவருக்கு ஞானசுந்தரி என்ற மனைவியும், ராதா என்ற மகளும், வீரபாகு என்ற மகனும் உள்ளனா்.
வி.ராஜ்மோகன், இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவா். இளமைக் காலம் முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தாா். மூச்சுத் திணறல் காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை காலமானாா்.
ராஜ்மோகனின் இறுதிச் சடங்கு குரோம்பேட்டை மின்மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.