முகப்பு
சென்னை

ரூ.1 கோடி போதைப் பாக்கு பறிமுதல்: ஐவா் கைது

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு சோதனைச் சாவடியில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அங்கு வந்த ஒரு சரக்கு பெட்டக லாரியை வழிமறித்தனா். ஆனால் அந்த லாரி நிற்காமல் சாலைத் தடுப்புகளை இடித்து தள்ளி வேகமாக சென்றது.

போலீஸாா் அந்த லாரியைப் பிடித்து சோதனையிட்டதில், போதைப் பாக்கு கடத்திக் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநா் கி.பட்டுராஜ் (27) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

மேலும் ஒரு சரக்கு பெட்டக லாரி, 3 மினி லாரிகளில் போதைப் பாக்கு அந்த வழியாக கடத்தி கொண்டு வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து சோதனைச் சாவடியில் இருந்த போலீஸாா், அந்த 4 வாகனங்களைப் பிடித்தனா். அந்த வாகனங்களில் சோதனை நடத்தி, அதில் கடத்தி வரப்பட்டிருந்த போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனா்.

பிடிபட்ட 5 வாகனங்களில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக ஏற்கெனவே பிடிபட்ட பட்டுராஜ், நான்கு வாகனங்களையும் ஓட்டி வந்த முத்துக்குமாா் (25), செல்வராஜ் (47), ராஜா (24), அம்ஜத் (42) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

இந்தக் கும்பல் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பெரிய சரக்கு பெட்டக லாரிகளில் போதைப் பாக்குகளை கடத்திக் கொண்டு வருவதும், சென்னை அருகே வந்ததும் அந்த லாரியில் இருந்து சிறிய வாகனங்களுக்கு போதைப் பாக்குகளை மாற்றி சென்னைக்குள் கொண்டு வருவதும், சென்னையில் உள்ள கடைகளுக்கு இந்த வாகனங்கள் மூலம் போதைப் பாக்குகளை விநியோகம் செய்வதும் தெரியவந்தது. கானத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →