நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு
2025 - 26 ஆம் ஆண்டில் வேளாண் துறை உற்பத்தி மதிப்பீடு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக...
2025 - 26 ஆம் ஆண்டில் நாட்டின் கோதுமை உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்து 120.21 மில்லியன் டன்னாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் கோதுமை உற்பத்தி 117.94 டன்னாக இருந்தது.
ராபி பயிர்களில் முக்கியமானதாக உள்ள கோதுமையின் அறுவடை, கோடை காலத்தையொட்டி தொடங்கியுள்ளது. கோதுமை அதிகம் விளையும் மாநிலங்களில் அறுவடை தொடங்கி படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மத்திய வேளாண் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 - 26 ஆண்டில் ராபி பயிர்களின் மொத்த உற்பத்தி 3.16 சதவீதம் அதிகரித்து 174.51 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 169.16 மில்லியன் டன்னாக இருந்தது.
Advertisement
Advertisement
2025 - 26 ஆம் ஆண்டில், பருப்பு வகைகளின் உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்து 16.24 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 15.23 மில்லியன் டன்னாக இருந்தது. இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில் நாட்டின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 11.11 டன்னாக இருந்த பட்டாணி உற்பத்தி, இந்த ஆண்டில் சற்று அதிகரித்து 11.79 மில்லியன் டன்னாக இருக்கும் எனவும் தானியங்கள் உற்பத்தி 1.65 மில்லியன் டன்னில் இருந்து 1.73 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று சோளத்தின் உற்பத்தி 14.75 டன்னில் இருந்து இந்த ஆண்டு 15.90 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 5,53,000 டன்னாக இருந்த உளுந்து உற்பத்தி இந்த ஆண்டு 5,08,000 டன்னாக குறையும் என்றும், பாசிப்பயிறு உற்பத்தி 100,000 டன்னில் இருந்து 87,000 டன்னாக குறையும் எனவும் வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.
India's wheat output pegged at record 120.21 mln tonnes in 2025-26, up 2 pc: Ministry
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.