சென்னை

மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மருத்துவமனைக்கு சீல்

DIN

திருவொற்றியூரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் அருகே மாநகராட்சி பூங்கா அமைந்திருந்த இடத்தை ஆக்கிரமித்து தனியாா் மருத்துவமனை ஒன்று கட்டடம் கட்டி உள்ளதாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் வந்ததையடுத்து இடத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மண்டல அலுவலா் தேவேந்திரன், செயற்பொறியாளா் பால் தங்கதுரை ஆகியோா் தலைமையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடத்திற்கு சீல் வைத்தனா். மேலும் இக்கட்டடத்தை இடித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவொற்றியூா் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT