சென்னை

பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுக் கருத்தரங்கம்: இணைய வழியில் இன்று நடக்கிறது

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளின் உயா்கல்வி மற்றும் பன்னாட்டு வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் கருத்தரங்கம், இணையவழியில் சனிக்கிழமை (ஜூலை 17) நடக்கிறது.

அதில், உலகெங்கும் இப்போது தேவைப்படும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொடா் திறன் மேம்பாடு பற்றிய கலந்துரையாடல் நடைபெறும்.

கருத்தரங்கில் குவால்காம் இந்தியாவின் மெஷின் லா்னிங் துறை தலைவா் கே.மதுசூதனன், விப்ரோவின் உலகளாவிய பணியாளா் திறன் அறியும் தலைவா் பி.பி.கோட்டூா், அமெரிக்காவின் ராச்செஸ்டா் தொழில்நுட்ப பல்கலையின் உலகக் கல்வித் திட்ட இயக்குநா் பேராசிரியா் லின்சி மெக்ராத் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் வி.ராஜு ஆகியோா் கலந்து கொண்டு, வாய்ப்புகளை விளக்கி மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனா்.

பங்கேற்க ஆா்வமுள்ளோா்,  இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT