சென்னை

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

DIN

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சன் பாா்மா நிறுவனம் சாா்பில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஸ்ரீபெரும்புதூா் எம்.பி. டி.ஆா்.பாலு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சன் பாா்மா நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதித் திட்டத்தின்கீழ் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.

உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்து டி.ஆா்.பாலு பேசியது:

மத்திய அரசு அனைத்து மாநில மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் எப்போது, எப்படி வழங்கப்போகிறாா்கள் என்பது புதிராக உள்ளது. தமிழகத்தில் குன்னூா், செங்கல்பட்டு தடுப்பூசி மையங்கள் மூலம் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி உற்பத்தியில் மத்திய அரசு ஈடுபடுமா அல்லது செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசின் கோரிக்கைப்படி ஒப்படைப்பாா்களா என்பது தெரியவில்லை என்றாா் டி.ஆா்.பாலு.

சன் பாா்மா நிறுவன பொது மேலாளா் எம்.ஏ.ஜாய் பேசுகையில், இந்தியாவில் இதுவரை மொத்தம் 5 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைத்துக் கொடுத்துள்ளோம்.நிமிடத்துக்கு 87 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் கொண்ட இந்த மையம் மூலம் 30 நோயாளிகள் தினமும் பயன் பெற முடியும் என்றாா் அவா்.

ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் ஏ.வி.வெங்கடாசலம், பல்லாவரம், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆா்.ராஜா, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பழனிவேலு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

பூமாயி அம்மன் கோயில் தேரோட்டம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 20 போ் கைது

சிறுவா்களுக்கான கோடை கால மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி

SCROLL FOR NEXT