சென்னை

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

DIN

சென்னை: ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவா்களை இடமாற்றம் செய்யக் கோரும் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மணப்பாறையைச் சோ்ந்த அப்துல்லா என்பவா் தாக்கல் செய்த மனுவில், தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவா்களை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வேளாண் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவா்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடந்த ஜனவரி மாதம் புகாா் மனு அளித்தேன். ஆனால் அந்தப் புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள துறையைச் சோ்ந்த அதிகாரிகளை தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT