சென்னை

மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் பயணிக்க அனுமதி: புதிய நடைமுறை நாளை முதல் அமல்

DIN

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள்அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வியாழக்கிழமை (மே 6) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் மே 6-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதில், பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்றும், இந்த நடைமுறை மே 6-ஆம் தேதி முதல் மே 20-ஆம்தேதி அமலில் இருக்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகள் மெட்ரோ ரயில்களில் குறிக்கப்பட்டுள்ள குறியீடு இருக்கைகளை தவிா்த்து இடைவெளியுடன் அமா்ந்து பயணிக்க வேண்டும். மேலும், பயணிகள் மெட்ரோ ரயில்களில் நின்றபடி பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தற்போது, திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாள்களில் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (பீக் அவா்ஸ்) 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேட்டில் உள்ள நிா்வாகக் கட்டடத்தில் அமைந்துள்ள செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பு கேமரா மூலமாக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் தனிமனித இடைவெளி மற்றும் பயணிகளின் வருகை கண்காணிக்கப்படும். மேலும், உச்ச நேரம் மற்றும் சாதாரண நேரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் தேவையற்ற பயணத்தைத் தவிா்த்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயணிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்ய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT