முகப்பு
சென்னை

திருநங்கையினருக்கும் இலவச பேருந்து சலுகை: முதல்வா் பரிசீலனை

 திருநங்கையினருக்கும் இலவச பேருந்து சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

 திருநங்கையினருக்கும் இலவச பேருந்து சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

திருநங்கைகளுக்கும் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து, தனது சுட்டுரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:-

மகளிா் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையா் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது திமுக அரசின் வழக்கம்.

பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பேருந்துகளில் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என்று பதிவில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →