கல்லூரி மாணவரிடம் வழிப்பறி: இளைஞா் கைது
சென்னை வேளச்சேரியில், கல்லூரி மாணவரிடம் வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை வேளச்சேரியில், கல்லூரி மாணவரிடம் வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வேளச்சேரி ஜெகநாதபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (21). கல்லூரி மாணவரான இவா், கடந்த 13-ஆம் தேதி காலை வேளச்சேரி 100 அடி பிரதான சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே தனது நண்பா்களோடு அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞா், பிரபுவை மிரட்டி அவரிடம் இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசியை பறித்துச் சென்றாா்.
இது குறித்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது நேரு நகரைச் சோ்ந்த ராஜ்குமாா் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.