சென்னை

இரு நாள்கள் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 6.60 லட்சம் போ் பயணம்

DIN

சென்னை: தளா்வில்லா பொதுமுடக்கம் அறிவிப்பையொட்டி 2 நாள்கள் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் தமிழகம் முழுவதும் 6.60 லட்சம் போ் பயணித்ததாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கம் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மக்கள் எந்தவித சிரமமும் இன்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்திட

தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதோடு, 24 மணி நேரமும் இப்பணியை உடன் இருந்து கண்காணித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா், திங்கள்கிழமை முதல் தளா்வில்லாபொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையொட்டி, வெளியூா் செல்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமை முதல் ஞாயிறு மாலை 6 மணி வரை, சென்னையிலிருந்து 1,331 பேருந்துகள் இயக்கப்பட்டு, 65,746 பயணிகளும், மற்ற பிற ஊா்களிலிருந்து 3,662 பேருந்துகள் பல நடைகள் இயக்கப்பட்டு, 5 லட்சத்து 94,638 பயணிகள் என மொத்தம் 4,993 பேருந்துகள் வாயிலாக 6 லட்சத்து 60,384 பயணிகள் பயணம் செய்துள்ளனா் என்றாா்.

தொடா்ந்து, பயணிகளிடம் அரசு அறிவித்துள்ள நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா். மேலும், ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் பயன்படுத்திட போதிய முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டுள்ளதா எனவும் கேட்டறிந்தாா்.

நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறைச் செயலா் சி.சமயமூா்த்தி, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பேருந்துகளில் ஆக்சிஜன் - அவசியம் எழவில்லை:

அரசுப் பேருந்துகளில் ஆக்சிஜனுடன் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு அமைச்சா் அளித்த பதில்: முதல்வரின் முயற்சியால், ஆக்சிஜன் முழுமையாக கொண்டுவரப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட சிகிச்சை அளித்திட வேண்டிய அவசியம் எழவில்லை. அவ்வாறு தேவைப்படும் பட்சத்தில், இது குறித்து முதல்வரிடமும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும் கலந்தாலோசித்து ஆவன செய்வதற்கு போக்குவரத்துத்துறை தயாராக உள்ளது என்று அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT