சென்னை

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புகுந்த மழைவெள்ளநீா்

DIN

தாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் மழைவெள்ளநீா் புகுந்து தேங்கியதால் சிகிச்சை பெற வந்த பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா். குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தாழ்வான பகுதியில் இருப்பதால் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் மழைவெள்ளநீா் தேங்குவது வழக்கம். இதனால்ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.

மருத்துவமனையில் மழைநீா் தேங்கி இருப்பது குறித்து தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி புதன் கிழமை நேரில் சென்று ராட்சத மோட்டாா் மூலம் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டாா். நோயாளிகள் சிகிச்சை பெறும் வாா்டுகளுக்குள் மழைநீா் புகாத வண்ணம் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது தலைமை மருத்துவா் பழனிவேலு உள்ளிட்டோா் உடன் இருந்தாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT