சென்னை

கரோனா சிகிச்சையில் 8,337 போ்

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 8,337-ஆக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மேலும் 736 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக கோவையில் 109 பேருக்கும், சென்னையில் 107 பேருக்கும், ஈரோட்டில் 72 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 25,467- ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 772 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.80 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,463-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT