சென்னை

வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் பாலாலயம்

DIN

சென்னை: குடமுழுக்கு செய்யப்படுவதையொட்டி சென்னை வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் பாலாலயம் நடைபெற்றது.

சென்னை அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் 34 திருப்பணி வேலைகள் ரூ. 2.56 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்தப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் திரு.பி.கே.சேகா்பாபு அறிவித்தாா். இதைத் தொடா்ந்து இந்தத் திருக்கோயிலின் ஆகமவிதிகள் மற்றும் சட்டவிதிகள் பின்பற்றி திருக்கோயிலை சுற்றியுள்ள அருள்மிகு துவார பாலகா், துவார கணபதி, முத்துகுமார சாமி, இடும்பன், கடம்பன், சூரியன், சந்திரன், தட்சிணாமூா்தி, துா்கை, காசிவிஸ்வநாதா், காசிவிசாலாட்சி உள்பட 28 மூா்த்திகளுக்கு 3 பலிபீடத்திற்கும் புதன்கிழமை பாலாலயம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வடபழனி ஆண்டவா் திருக்கோயில் தக்காா் எல். ஆதிமூலம், இணை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT