சென்னை ஆலப்பாக்கத்தில் வீகேரின் புதிய ஆய்வகம் திறப்பு 
சென்னை

வீகேர் புதிய ஆய்வகம் சென்னை ஆலப்பாக்கத்தில் திறப்பு

வீகேர் நிறுவனம், தலைமுடி மற்றும் பொடுகுப் பிரச்னைகளைக் களையும் வகையில் சென்னை ஆலப்பாக்கத்தில் தனது புதிய ஆய்வகத்தினை திறந்துள்ளது.

DIN


சென்னை: தலைமுடி மற்றும் பொடுகுப் பிரச்னைகளைக் களைவதற்கான ஆய்வுகளுக்கென சென்னை ஆலப்பாக்கத்தில் புதிய ஆய்வகத்தினை  வீகேர் நிறுவனம் திறந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி நிலையத்தை நிறுவனத்தின் தலைவர் பிரபா ரெட்டி, புதன்கிழமை  திறந்துவைத்தார்.

வீகேர் நிறுவனம் வழங்கும் நவீன சிகிச்சை முறையில் மேலும் பல புதிய  சிகிச்சை முறைகளை உருவாக்கி அதன் வளர்ச்சியில் ஒரு சிறப்பை  இந்த ஆராய்ச்சி நிலையம் சேர்க்கும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி - ஆராய்ச்சித் துறை அதிகாரியுமான முகுந்தன் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

அனைத்துவிதமான தலைமுடி பிரச்னைகளுக்கும் உச்சந்தலை முதல் தலைமுடி பிரச்னை வரை அனைத்தையும் விளக்கும் ட்ரைக்காலஜி அறிவியல் அடிப்படையில் வீகேர் தீர்வளிக்கிறது. 

தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு வீகேர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட முறைகளான ட்ரைக்கோஸ்கேன், மைக்ரோஸ்கோபி போன்ற தொழில்நுட்ப முறைகளை தங்களது கிளினிக்குகளில் பயன்படுத்துகிறது. தலைமுடியில் தாதுக்களின் பகுப்பாய்வு (ஹேர் மினரல்ஸ் அனலிசிஸ்-எச்எம்ஏ ) முறையை வீகேர் நிறுவனம் 2011ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது.

இப்பொழுது, வீகேர் நிறுவனம் பொடுகினை உண்டாக்கக் கூடிய பூஞ்ஜை இனங்களை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப முறையை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், தலைமுடி பகுப்பாய்வு மற்றும் பொடுகை உருவாக்கும் பூஞ்சை பகுப்பாய்வு முறைக்கென்றே சென்னை ஆலப்பாக்கத்தில் புதிய ஆய்வகத்தினை வீகேர் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.

இந்த ஆய்வகம் சிகிச்சை முறைகளை மேம்படுத்தும் ஆராய்ச்சி நிலையமாக திகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT