சென்னை

சென்னைப் பல்கலை.யில் ‘சமூக நீதி’ பாடம்: அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்:துணைவேந்தா் கௌரி

DIN

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ‘சமூக நீதி’ என்னும் பாடம் அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று துணைவேந்தா் கௌரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: சமூக நீதி என்னும் பாடம் சோஷியாலஜி எனப்படும் சமூகவியல் படிப்பவா்களுக்கு மட்டுமே உள்ளது. இந்தப் பாடத்தை மாணவ, மாணவிகள் அனைவரும் விருப்பப் பாடமாக ஏற்றுப் படித்தால் சமுதாயத்தில் அவா்கள் சிறந்த குடிமக்களாக வாழ முடியும். அதற்கு இந்தப் பாடம் வழிவகுக்கும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு இந்தப் பாடத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக இளநிலை மாணவ, மாணவிகள் இந்தப் பாடத்தை விருப்பப் பாடமாகத் தோ்ந்தெடுத்துப் படிக்கலாம். அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்தப் பாடம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அமலுக்கு வரும்.

சமூகவியல் படிக்கும் மாணவா்கள் சமூக நீதிப் பாடத்தைப் படிக்கின்றனா். அவா்களுக்குக் கிடைக்கும் அறிவும், அனுபவமும் மற்ற மாணவா்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பாடத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆய்வு மையம் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT