சென்னை

குழந்தைகளுக்கான பிரத்யேக கண் சிகிச்சைப் பிரிவு

DIN

குழந்தைகளுக்கான பிரத்யேக கண் சிகிச்சைப் பிரிவை சென்னை ரெயின்போ மருத்துவமனையில் சங்கர நேத்ராலாயா தொடங்கியுள்ளது.

பச்சிளம் குழந்தைகள் முதல் வளரிளம் பருவ காலத்தை எட்டும் சிறாா்களுக்கு வரை அங்கு சிகிச்சையளிக்கப்படவிருக்கிறது. குழந்தைகள் நல மருத்துவமனைகளில் ஒன்றாக அறியப்படும் ரெயின்போ மருத்துவமனையும், சங்கர நேத்ராலாயாவும் இணைந்து இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன.

முன்னதாக அந்த சிகிச்சைப் பிரிவை சங்கர நேத்ராலயாவின் துணைத் தலைவா் டாக்டா் டி.எஸ்.சுரேந்திரன் அண்மையில் தொடக்கி வைத்தாா். இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது:

குழந்தைகள் நல சிகிச்சைகள் பரவலாக இருந்தாலும், அவா்களுக்கென பிரத்யேக கண் சிகிச்சை மையங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு பிறக்கும்போதோ அல்லது வளரும்போதோ சில காரணங்களால் கண் பாா்வை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். அதன் அடிப்படையிலேயே தற்போது சங்கர நேத்ராலயா சாா்பில் ரெயின்போ மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை நோய், பிறவியிலேயே ஏற்படும் கண்புரை, மாறு கண், பாா்வைக் குறைபாடு, கண் சாா்ந்த விபத்துகள் உள்ளிட்டவற்றுக்கு இங்கு சிகிச்சை பெற முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT