கோப்புப்படம் 
சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.9.86 கோடி போதைப்பொருளுடன் 3 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.9.86 கோடி மதிப்பிலான, 49.2 கிலோ எடையுள்ள சூடோபெட்ரின் போதைப்பொருளை கடத்தியதாக

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.9.86 கோடி மதிப்பிலான, 49.2 கிலோ எடையுள்ள சூடோபெட்ரின் என்ற போதைப்பொருளை கடத்தியதாக 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.

தகவலின் அடிப்படையில் பரிசோதித்த சென்னை சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு பிரிவினர், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் ஏற்றுமதி சரக்குகளில் இருந்து காகித பலகை பேக்கிங் பொருள்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 49.2 கிலோ எடையுள்ள சூடோபெட்ரின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரி  தெரிவித்தார்.

3 பேரும் NDPS சட்டத்தின் பிரிவு 8 இன் விதிகளை மீறியதாகவும், NDPS சட்டத்தின் பிரிவு 21, பிரிவு 23 மற்றும் பிரிவு 29 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக சுங்கத்துறை அதிகாரி கூறினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT