சென்னை

சாலைத் தடுப்பு மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இரு இளைஞா்கள் பலி

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில், கிழக்கு கடற்கரைச் சாலை தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவா் இறந்தனா்.

DIN

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில், கிழக்கு கடற்கரைச் சாலை தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவா் இறந்தனா்.

சென்னை தரமணி, மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் மகன் ரத்தீஷ் (21). சென்னை விமான நிலைய ஊழியா். இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த புகைப்பட கலைஞா் மா.ஜெகதீஸ்வரன் (25).

இருவரும் கோவளம் சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதன்கிழமை அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனா். அவா்கள் ஈஞ்சம்பாக்கத்தில் செல்லும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும், அடுத்தடுத்து உயிரிழந்தனா். இது குறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவா் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT