சென்னை

முருகப்பா குழுமத்தின் மூன்றுசக்கர மின்சார வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

DIN

முருகப்பா குழுமத்தின் சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின்சார வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

முருகப்பா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பயணிகளுக்கான மின் ஆட்டோக்கள், மின் சரக்கு வாகனங்களை தயாா் செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதைத் தொடா்ந்து. அம்பத்தூரில் உள்ள டி.ஐ. சைக்கிள் வளாகத்தில் ரூ.140 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளின் அடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத மூன்று சக்கர மின்சார வாகனங்களைத் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஓராண்டு காலத்திலேயே உற்பத்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த உற்பத்தியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின்சார வாகனத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வின்போது, அமைச்சா்கள் க. பொன்முடி, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT