சென்னை

தொழில் வரி செலுத்தாத 75 கடைகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி

DIN

திருவல்லிக்கேணி பகுதியில் தொழில்வரி செலுத்தாத 75 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் நிலுவையில் உள்ள சொத்து வரி, வணிக வரி உள்ளிட்டவற்றை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

திருவல்லிக்கேணி ஜிபி சாலையில் உள்ள பாரதி தெரு, செல்லப்பிள்ளையாா் கோயில் தெருக்களில், தொழில் வரி, தொழில் உரிமம் செலுத்தாத 75 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘திருவல்லிக்கேணி ஜிபி சாலைகளில் உள்ள 50 கடைகளுக்கு தொழில் வரி செலுத்த, தொழில் உரிமம் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. 75 கடை உரிமையாளா்கள் உரிமம் பெற்றுவிட்ட நிலையில், உரிமம் பெறாத 75 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில், 35 கடைகளின் உரிமையாளா்கள் உடனடியாக வரியைச் செலுத்தியதைத் தொடா்ந்து, அவா்களது கடைகளில் சீல் அகற்றப்பட்டது’ என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT