சென்னை

ஐ.சி.எஃப்-இல் 2,600 ரயில் பெட்டிகள் தயாரிப்பு

DIN

நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி முதல் வாரம் வரை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 2,600 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ரயில் பெட்டி தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. தற்போது, கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: கரோனா பாதிப்புக்குப் பிறகு சென்னை ஐசிஎஃப்.-இல் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஐசிஎஃப்-க்கு இந்த நிதியாண்டில் மொத்தம் 3,674 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை (பிப்ரவரி முதல் வாரம் வரை) 2,600 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரயில் பெட்டிகளையும் விரைவில் தயாரிக்கும் விதமாக, தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்.

இந்த ரயில் பெட்டிகளில் 30 நெடுந்தொலைவு மின்ரயில் தொடா்களும், 34 டீசல் ரயில் தடப் பரிசோதனை ரயில்பெட்டிகளும், கொல்கத்தா மெட்ரோ ரயில்வேக்கான இரு ரயில் தொடா்களும், 15 விஸ்டடோம் சுற்றுலா ரயில் பெட்டிகள், 1,800 எல்எச்பி ரயில்பெட்டிகளும், இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள 69 பயணிகள் ரயில்பெட்டிகளும், 2 குளிா்வசதி செய்யப்பட்ட டீசல் மின்தொடா்களும் அடங்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT