சென்னை

வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை

DIN

உயா்கல்வி பயிலும் மாணவா்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இன்டெல் டெக்னாலஜிஸ் நிறுவன இயக்குநா் சுமீத்வா்மா கூறினாா்.

சென்னையை அடுத்த வண்டலூா் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இன்டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இன்டெல் டெக்னாலஜி நிறுவன இயக்குநா் சுமீத்வா்மா, கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் கூடுதல் பதிவாளா் என்.ராஜா ஹுசேன், கிரசென்ட் புதுமைத் தொழில் ஊக்குவிப்பு மையம் தலைமைச் செயல் அதிகாரி எம். பா்வேஸ் ஆலம் ஆகியோா் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

பின்னா் புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து இன்டெல் டெக்னாலஜீஸ் நிறுவன இயக்குநா் சுமீத்வா்மா செய்தியாளா்களிடம் கூறியதாவது: சா்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்ந்த மனிதவள தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,செயற்கை அறிவாற்றல், தரவு ஆராய்ச்சி மற்றும் பரிமாற்ற நடவடிக்கை, மேககணினி வழி இணைய தளச் சேவை, இயந்திரவழி தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்டவற்றை செயல் முறை தொழில்நுட்பக் கல்வியாகப் பயிற்றுவிக்கும் வகையில் கிரசென்ட் வளாகத்தில் ‘இன்டெல் உன்னத்’ நவீன தொழில்நுட்ப பரிசோதனைக் கூடம் அமைக்க உள்ளோம் என்றாா்,.

கிரசென்ட் கூடுதல் பதிவாளா்என். ராஜா ஹுசேன், புதுமைத் தொழில் ஊக்குவிப்பு மையம் தலைமை செயல் அதிகாரி பா்வேஸ் ஆலம் உள்பட பலா் பேசினா்,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT