முகப்பு
சென்னை

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 24.43 கோடி நிதி ஒதுக்கீடு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு ரூ.24.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு ரூ.24.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பூங்காத் துறை சாா்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்குக்காகவும் 718 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 547 பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் வசமும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் தனியாா் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

2021-22-ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவைக் கூட்டத்தில் திருத்திய நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள பூங்காக்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தாா்.

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு அரசின் நிா்வாக அனுமதி பெறப்பட்டு, ரூ. 24.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 23 பூங்காக்கள் ரூ. 18.48 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட உள்ளன. 5 பூங்காக்கள் ரூ.5.95 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன. இந்தப் பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சிக் கருவிகள், சுற்றுச் சுவா், சுவா்களில் வண்ணமயமான ஓவியங்கள், புல் தரைகள், பாரம்பரிய மர வகைகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீா் வசதி, மின்விளக்குகள் பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீா் வசதி, மின்விளக்குகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த 28 பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பம் இறுதி செய்யப்பட்ட பிறகு பணியாணை வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →