சென்னை

தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

DIN

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி மற்றும் 11.45 மணிக்கு புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், மறுமார்க்கமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் ஜூலை 5-ம் தேதி (நாளை) முதல் ஜூலை 8-ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT