சென்னை

திருச்சி செல்லும் அரசு பேருந்துக்குள் பெய்த மழையால் பயணிகள் அவதி

திருச்சி செல்லும் அரசு பேருந்துக்குள் பெய்த மழையால் பயணிகள் அவதிக்குயுள்ளாகினர்.

DIN

சென்னை: திருச்சி செல்லும் அரசு பேருந்துக்குள் பெய்த மழையால் பயணிகள் அவதிக்குயுள்ளாகினர்.

கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் பயணித்த நிலையில் இரவு பெய்த கனமழை காரணமாக பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீரானது பேருந்துக்குள் அதிகளவில் ஒழுக ஆரம்பித்தது. 

இதனால் பயணிகள் பேருந்தின் இருக்கைகளில் அமர முடியாமல், பேருந்திற்குள் நின்றபடியே பயணம் செய்தனர். குறிப்பாக பயணிகள் எடுத்து செல்லும் பைகளை வைக்கக்கூடிய இடத்திலும் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால், பைகளை கூட வைக்க முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். 

பேருந்து முழுவதும் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் செய்வதறியாமல் திகைத்தபடி பேருந்தில் நின்றபடியே பயணம் செய்தனர். சிலர் இருக்கைகளின் மேற்பகுதியில் அமர்ந்தபடி சென்றனர். இதனை அந்த பேருந்தில் செய்த பயணிகள் செல்லிடைப்பேசி மூலம் விடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். 

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு பேருந்து மேற்கூரை வழியாக மழை நீர் ஆறாக ஓடிய காட்சிகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

ரவி மோகனின் ப்ரோ கோட் பட பெயரைத் தடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

SCROLL FOR NEXT