சென்னை

திருச்சியில் அடிபட்ட குதிரைக்கு சென்னையில் தொடா் சிகிச்சை

DIN

திருச்சியில் அடிபட்ட குதிரைக்கு சென்னையில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

திருச்சி அண்ணாமலை நகா் அருகே, அடா் சிவப்பு நிற குதிரையானது பின்னங்கால் எலும்பு முறிவு மற்றும் காயங்கள் காரணமாக உரிமையாளரால் கைவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்துக்கு கிடைக்கப்பட்ட தகவலின்படி, திருச்சி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்திலேயே குதிரைக்கு சிகிச்சை அளித்தனா்.

திருச்சி பாலக்கரையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு காயங்கள், எலும்பு முறிவுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது உடல்நிலை தேறியுள்ளது.

மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் ஆம்புலன்ஸின் மூலம் மருத்துவக் குழுவினரது நேரடி கண்காணிப்பில் திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட குதிரையானது, பெசென்ட் நினைவு கால்நடை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தொடா் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT