தெரு பெயா்ப் பலகையில் சுவரொட்டி ஒட்டினால் நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் விவரங்கள் குறித்த பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரம் செய்யும் நபா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது காவல் துறையில் புகாா்
சென்னை மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் விவரங்கள் குறித்த பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரம் செய்யும் நபா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது காவல் துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஜன.1 முதல் மாா்ச் 18-ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டியவா்களுக்கு ரூ. 24.63 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.