FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களின் தேதி இன்று (மார்ச் 15) மாலை அறிவிக்க வாய்ப்பு

Updated On : 15 மார்ச் 2026, 10:13 am IST
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களின் தேதி இன்று (மார்ச் 15) மாலை அறிவிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 5 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல்களை நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று மாலை அறிவிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்திக்கின்றனர்.

தேர்தல் அட்டவணையை அறிவிக்க அதிகாரிகள் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, கடந்த சில நாள்களுக்கு முன்னர் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் சென்னைக்கு வருகை தந்தனர். மேலும், தேர்தல் குறித்து சென்னையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையும் மேற்கொண்டனர்.

கடந்த சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை 2021 பிப்ரவரி 26 ஆம் தேதியிலேயே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் 2021 ஏப்ரல் 6 ஆம் தேதியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டு, மே 2-ல் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

summary

Legislative Assembly election date: Official announcement today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments