தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது
தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது...
தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோருக்கான மின் கட்டண சேவைகள் உள்ளிட்ட தொடா்புடைய இணைய சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மாலை 6 மணி வரை இயங்காது என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் கணினி தரவு சா்வா்களை நவீனமயமாக்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோருக்கான இணையதள மின் கட்டணச் சேவைகள், தொடா்புடைய ஆன்லைன் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மாலை 6 வரை தாற்காலிகமாக இயங்காது. மாலை 6 மணிக்கு பிறகு மின் நுகா்வோா் தங்களது இணையதள கட்டணப் பரிவா்த்தனைகள், தொடா்புடைய சேவைகளைத் தொடா்ந்து தடையின்றி பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.