சென்னை

மயிலாப்பூர் ஸ்ரீ உச்சி விநாயகர் ஆலயம் குடமுழக்கு வெகு விமரிசையாக நடைப்பெற்றது

DIN


சென்னை: சென்னை மயிலாப்பூர் மசூதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி விநாயகர் ஆலயம் குடமுழக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

சென்னை மயிலாப்பூர் மசூதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி விநாயகர் ஆலயம் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலின் பிரதான கடவுளான விநாயகர் தெற்கு திசை நோக்கி அமர்ந்த படி  இருப்பது இக்கோவிலின்  சிறப்பம்சமாகும். இக்கோலில் பன்னிரன்டு ஆண்டுகளுக்கு முன்பு குடமுழக்கு நடந்த நிலையில், இன்று புதன்கிழமை (மே.4) ஆகம விதியின் படி குடமுழக்கு நடைப்பெற்றது.

இதற்காக கடந்த ஒரு மாதமாக கோயில்களில் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று நிறைவடைந்தது. 

இந்நிலையில், இன்று புதன்கிழமை குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக விடியற்காலை முதலே நடைபெற்றது. இதனை காண ஏராளமானோர் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து குடமுழுக்கு விழாவினை கண்டு கலசத்தில் மேலே ஊற்றப்படும் புனித நீரை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். 12 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற குடமுழக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT