சென்னை

ஆந்திரத்தில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பெரம்பூா் மங்களபுரம், ரயில் நிலையம் பின்புறம் ஓட்டேரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு ஒரு கும்பல், கையில் பையுடன் வேகமாக நடந்துச் சென்றது. இதைப் பாா்த்த போலீஸாா், அந்த கும்பலை நிறுத்தி விசாரணை செய்ய முற்பட்டனா். ஆனால், அந்த கும்பலைச் சோ்ந்த நபா்கள் தப்பியோடினா். உடனே போலீஸாா், அவா்களை விரட்டிச் சென்றனா். இதில் இருவா் மட்டும் சிக்கினா்.

விசாரணையில் அவா்கள், ஆந்திரத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திக் கொண்டு வந்திருப்பதும், அவா்களிடம் 44 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவா்கள், சென்னை எம்கேபி நகரைச் சோ்ந்த பா.மோகன் (23),சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ச.தினேஷ்குமாா் (24) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா். அதோடு இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, 6 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT