சென்னை

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தர்கள்

DIN

சென்னை: கார்த்திகை முதல் நாளான வியாழக்கிழமை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் துளசி மாலை அணிய பக்தர்கள் திரண்டனர்.

கோயிலில் காலை 5 மணி முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். சுமார் 10 மணி வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால், ஐயப்பன் கோயிலை ஒட்டிய சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு
உள்ளனாது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்பொழுது கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுடன் மாலை அணிந்ததே இதற்கு காரணம் என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.

பக்தர்களின் கவனத்திற்கு...

பெருவழிபதை, புல்மேடு பாதை, நீலிமலை, சுவாமி ஐயப்பன் பாதை வழியாக செல்ல இந்த முறை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

சபரிமலை கோயிலுக்கு சரக்கு வாகனம், ஆட்டோ செல்ல அனுமதி இல்லை. இருச்சக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்கள் கட்டாயம் தலைகவசம் அணியவேண்டும். தனியார் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் நிலக்கலில் வாகனங்களை நிறுத்தலாம். பம்பையில் இடமிருந்தால் சிறு வாகனங்கள் நிறுத்திக்கொள்ளலாம்.

பக்தர்கள் சுவாமி ஐயப்பன் பாதை, நீலிமலை பாதை வழியாக பம்பையில் இருந்து சன்னிதானம் 7 கிலோ மீட்டர் செல்ல முடியும். எருமேலி வரை வாகனத்தில் சென்ற பின்னர் அங்கிருந்து பெருவழி பாதை சுமார் 75 கிலோ மீட்டர் அடர்ந்த காடு, மலைகளை கடந்து செல்வது. அழுதை நதி வழியாகவும் சன்னிதானம் செல்லலாம்.

அதேபோல் குமுளி வழியாக வண்டி பெரியார் வந்து புல்மேடு பாதை வழியாக சன்னிதானத்தை 12 கிலோ மீட்டர் அடையலாம்.

ஐயப்ப பக்தர்கள் யாத்திரை செல்லும் பாதைகளில் குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை அரசு செய்துள்ளது.

இணையத்தில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு சபரிமலையில் 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்ய ஆதார்டு கார்டு, பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிலக்கல், குமளி, திருவனந்தபுரம், ஸ்ரீ கண்டேஸ்வரம், மணிகண்டேஸ்வரம், பந்தளம், வலியகோயிக்கல் கோயில், செங்கனூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT