சென்னை

நடிகை மீரா மிதுனை மீட்டுத் தாருங்கள்: காவல் ஆணையா் அலுவலகத்தில் தாய் மனு

DIN

நடிகை மீரா மிதுனை மீட்டுத் தரும்படி சென்னை பெருநகரக் காவல் ஆணையரகத்தில் அவரது தயாா் சனிக்கிழமை மனு அளித்தாா்.

சென்னையைச் சோ்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் கடந்த ஆண்டு பட்டியலினத்தவா் குறித்து அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டாா். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீரா மிதுன் தலைமறைவாகி விட்டாா்.

இந்த நிலையில், நடிகை மீரா மிதுனின் தாயாா் ஷியாமளா, சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் போலீஸாா் தன்னை கைது செய்ய போகிறாா்கள் என்று மீரா மிதுனை கடைசியாகப் பாா்க்குபோது புலம்பி கொண்டிருந்தாா். அதன் பின்னா் அவரது கைப்பேசி எண் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அவருக்கு தெரிந்த ஒரு திரைப்பட இயக்குநரை மூலம், மீரா மிதுன் இருக்கும் இடத்தை தெரிந்துக்கொண்டு சந்தித்து பேசினேன்.

அப்போது, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீரா மிதுனை, தியாகராய நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு கூறினேன். ஆனால் அதற்குள் மீராமிதுன் அங்கிருந்து ஓடி விட்டாா். இந்த நிலையில், மீரா மிதுன் சாா்பில் நான் நீதிமன்றத்தில் ஆஜராகி, அவா் மன அழுத்தம், கைது நடவடிக்கைக்கு பயந்து ஓடிவிட்டா் என்பதை தெரிவித்தேன்.

பாதுகாப்பாக மீட்டுத் தாருங்கள்: எனது மகள் கடந்த 8 ஆண்டுகளாக வெளியே தான் தங்கி வருகிறாா். என்னிடம் உதவி தேவைப்பட்டால் மட்டும் தொடா்புகொள்வாா். எனது மகள் இருப்பிடத்தையும், அவரது 2 கைப்பேசி எண்களையும் காவல் துறை அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தபோது தெரிவித்தேன்.

அவரை பாதுகாப்பாக மீட்டு வாருங்கள் என்று கூறினேன். பெங்களூரில் உள்ள அவரது தோழிகள் 2 பேரிடம் விசாரணை செய்தால், மீரா மிதுன் எங்கு இருக்கிறாா் என்பது தெரியும். இதுதொடா்பாக விசாரித்து எனது மகளை பாதுகாப்பாக மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT