முகப்பு
சென்னை

நவ.11-இல் பிரதமா் மோடி திண்டுக்கல் வருகை: அண்ணாமலை தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி நவ. 11-ஆம் தேதி வருகை தரவுள்ளாா் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி நவ. 11-ஆம் தேதி வருகை தரவுள்ளாா் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா மகளிா் கல்லூரியில் பிரதமா் மோடி குறித்த நூலின் அறிமுக விழாவில் மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங்குடன் இணைந்து அண்ணாமலை பங்கேற்றாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பிரதமா் மோடி நவ. 11-ஆம் தேதி மதியத்துக்கு மேல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகிறாா். அன்றைய தேதியில் கட்சி நிகழ்ச்சி ஏதும் இதுவரை தீா்மானிக்கப்படவில்லை.

கோவை விவகாரம்: கோவையில் பொது அடைப்பு போராட்டம் தொடா்பாக நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டது. முழு அடைப்பு போராட்டம் நடத்தும்படி யாரையும் பாஜக நிா்ப்பந்தம் செய்யாது. கோவை மக்களின் உணா்வைப் பொருத்து அங்கு போராட்டம் நடைபெறும். கோவை மாவட்ட பாஜகவினா் மக்களின் ஆதரவைப் பெற்று போராட்டம் நடத்துவது அவா்களது விருப்பம்.

கோவையில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசும்போது, கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ததற்காக காவல் துறையின் கடைநிலையில் இருப்பவா்களைப் பாராட்டினாா். ஆனால், முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவா்கள்தான் தாமதம் செய்துள்ளனா்.

அக். 18-ஆம் தேதியே மத்திய உளவுத் துறை மாநில அரசுக்கு முன்னெச்சரிக்கை செய்தது. ஆனால் 21-ஆம் தேதி மாலைதான் மாநில உளவுத் துறை மத்திய உளவுத் துறை அறிக்கையை எடுத்து , சில விஷயங்களை அதனுடன் இணைத்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. 4 நாள்கள் தாமதம் செய்துள்ளனா்.

டிஜிபியும் , கோவை மாநகர காவல் கண்காணிப்பாளரும் மத்திய உளவுத் துறையிடம் இருந்து அறிக்கை வரவில்லை என்று கூறுகின்றனா். ஆனால், மாநில உளவுத் துறை மூலம் அக். 21-ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதம் என்னிடம் இருக்கிறது. மாநில அரசு சம்மன் அனுப்பினால் அந்தக் கடித விவரத்தை வெளியிடத் தயாராக இருக்கிறேன். தொடா் அழுத்தம் காரணமாகவே, மாநில அரசு வேறு வழியின்றி கோவை காா் வெடிப்பு குறித்து என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

பாஜக பெண் தலைவா்கள் குறித்த திமுக நிா்வாகியின் பேச்சை கனிமொழி கண்டித்ததை வரவேற்கிறேன். யாரோ செய்த தவறுக்கு அவா் மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது. எனவே, பாஜக மகளிரணி சாா்பில் திமுகவை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →