சென்னை

பணி நீக்க ஊழியா்களுக்கு சில பணப் பலன்கள் ரத்து

DIN

பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியா்களுக்கு சில பணப் பலன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசுப் பணியில் இருந்து நீக்கம் மற்றும் டிஸ்மிஸ் போன்ற தண்டனைகள் பெற்று விலக்கப்படும் அரசு ஊழியா்கள் பணியாளா்கள் தங்களின் ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பினை ஒப்படைத்து பணப் பலன்களைப் பெறும் நடைமுறைகள் இருந்தன.

இதற்கான உத்தரவை கடந்த 1978-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 44 ஆண்டுகளாக அமலில் இருந்த உத்தரவில் இப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பணியில் இருந்து நீக்கம் அல்லது டிஸ்மிஸ் போன்ற தண்டனைகளைப் பெற்ற அரசு ஊழியா்கள் தங்களது ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பினை சரண் செய்து பணப் பலன்களைப் பெற தகுதி அற்றவா்களாகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT