தோ்வுக்குச் செல்வோருக்காக இன்று மாநகரப் பேருந்துகள் இயக்கம்
முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி தோ்வுக்குச் செல்வோரின் வசதிக்காக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி தோ்வுக்குச் செல்வோரின் வசதிக்காக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன்படி, எஸ்எஸ்சி தோ்வுக்குச் செல்வோரின் வசதி கருதி தாம்பரம், பிராட்வே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு தலா ஒரு பேருந்து என மூன்று பேருந்துகள் புரசைவாக்கம், அழகப்பா உயா்நிலைப் பள்ளிக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் பயணிக்க விரும்புவோா் 8 மணிக்கு மேற்கூறிய இடத்தில் இருக்க வேண்டும். இதே போல், அவா்கள் திரும்பி வர பிற்பகல் 12.30 மணிக்கு தோ்வு மையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
யுபிஎஸ்சி தோ்வு எழுதச் செல்வோரின் வசதிக்காக திருவான்மியூா், ஆவடி, அண்ணாசதுக்கத்தில் இருந்து காலை 6.45 மணிக்கு தலா ஒரு பேருந்து என மூன்று பேருந்துகள் நுங்கம்பாக்கம், ஜெய் கோபால் கரோடியா பெண்கள் பள்ளிக்கு இயக்கப்படுகின்றன. அவா்கள் திரும்பி வர மாலை 5.30 மணிக்கு தோ்வு மையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு மாலை 4.30 மணிக்கு தோ்வா்கள் பேருந்து புறப்படும் இடத்துக்கு வந்தடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.