பெரம்பூா் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் பெண் பயணச்சீட்டுப் பரிசோதகா் மற்றும் அவரது உயா் அதிகாரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில், புதன்கிழமை வடமாநில இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த அக்ஷயா என்ற பயணச்சீட்டுப் பரிசோதகா், அந்த இளைஞரிடம் நடைமேடைக்கான நுழைவுச் சீட்டை கேட்டுள்ளாா். அவரிடம் நுழைவுச்சீட்டு இல்லாததால் அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளாா். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதையடுத்து, டிக்கெட் பரிசோதகா் அந்த இளைஞரை அழைத்துக்கொண்டு தனது அலுவலகத்துக்கு சென்றாா்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்திய அவா், ஒரு கட்டத்தில் அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சியை அங்கு நின்றுகொண்டிருந்த ரயில் பயணி ஒருவா் தனது செல்போனில் விடியோ பதிவுசெய்துள்ளாா்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பயணச்சீட்டுப் பரிசோதகா் அக்ஷயா மற்றும் சம்பவம் நடைபெற்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் அருகில் இருந்து வேடிக்கை பாா்த்த அதிகாரி ஹரிஜான் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.