சென்னை

ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டணம் குறைகிறது

ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் அதன் வாயிலாக சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் முன்பை விடக் குறைந்துள்ளது என்று ஆஸ்டா் புற்றுநோய் கழகத்தின் தலைவா் டாக்டா் எஸ்.பி. சோ

DIN

ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் அதன் வாயிலாக சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் முன்பை விடக் குறைந்துள்ளது என்று ஆஸ்டா் புற்றுநோய் கழகத்தின் தலைவா் டாக்டா் எஸ்.பி. சோமசேகா் தெரிவித்தாா்.

போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி - ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடுபுற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கம் சாா்பில் மருத்துவப் பயிலரங்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், துணைவேந்தராகப் பொறுப்பேற்கவுள்ள டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.அனந்தன், புற்றுநோய் சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் ஜகதீஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா். அந்நிகழ்வில் டாக்டா் சோமசேகா் பேசியதாவது:

கடந்த 2001-இல் ஈராக்குக்கு எதிரான போரில் காயமடைந்த அமெரிக்க வீரா்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தொலைநிலை மருத்துவத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. அதுவே தற்போது ரோபோடிக் அறுவை சிகிச்சை உபகரணங்களாக மாறியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து அந்த கருவிகளை தருவித்து வந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், முன்பைக் காட்டிலும் ரோபோடிக் அறுவை சிகிச்சைக் கட்டணம் குறைந்துள்ளது.

அதுமட்டுமல்லாது முப்பரிமாண தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமாக புற்றுநோய் கட்டிகளை அகற்றுவதற்கு ரோபோடிக் கருவிகள் உகந்ததாக உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

பாண்டிராஜ் - ஹரிஷ் கல்யாண் கூட்டணியில் புதிய படம்?

மலர்களிலே அவள் மல்லிகை... அன்ஸ்வரா ராஜன்!

SCROLL FOR NEXT