கடந்த 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பதிப்பகம் இதுவரையில் 1,275 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அண்ணாவின் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருப்பதால், அவருடைய நூல்கள் என்றாலே பூம்புகாரையே நினைவுபடுத்துவதாக உள்ளது.
மகாகவி பாரதி, புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயணகவி என தமிழின் பல முன்னோடிகளது புத்தகங்கள் பல இப்பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மகாகவி பாரதியின் கவிதைகள், பகவத்கீதை, கதைகள், கட்டுரைகள் மலிவுப் பதிப்பிலே வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய நூல்களில், உரையுடன் கூடிய திருக்குறள் கையடக்கப் பதிப்பு லட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளது.
திருக்குறள் கையடக்கப் புத்தகமானது தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் குமரிஅனந்தன் உள்ளிட்டோரது புத்தகங்களும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழறிஞர்களில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேயப் பாவாணர், ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை, மறைமலையடிகள், வ.சுப.மாணிக்கனார், மா.ராசமாணிக்கனார், மயிலை சீனி.வேங்கடசாமி,
ரா.பி.சேதுபிள்ளை என நூற்றுக்கணக்கான தமிழறிஞர்களின் இலக்கியப் புத்தகங்களும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
சங்ககால இலக்கியம் முதல் தற்கால சிறுகதைகள், திரில் கதைகள் வரையில் எழுத்தாளர்கள் அனைவரது புத்தகங்களும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர் அதன் நிர்வாகிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.