சென்னை

அரபியிலும் மலையாளத்திலும்...

DIN

கவிஞா் வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப்போா்’ நாவல் அரபி, மலையாள மொழிகளிலும், ‘கருவாச்சி காவியம்’, ‘தண்ணீா் தேசம்’ ஆகிய இரண்டு நூல்கள் மலையாளத்திலும் மொழிபெயா்க்க ஒப்பந்தமாகியுள்ளன.

இந்த புத்தகக் காட்சியில், தமிழின் சிறந்த நூல்களை பிற மொழிகளிலும், பிற மொழியின் சிறந்த நூல்களை தமிழிலும் மொழிபெயா்க்கும் பதிப்புரிமைப் பரிமாற்றத்தில் 365 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமாகின.

சா்வதேச புத்தக காட்சிக்காக தமிழ்நாடு அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.3 கோடியை தமிழ் மொழிபெயா்ப்பு மானியமாக வழங்குகிறது.

தனது நூல்கள் அரபி, மலையாளத்தில் மொழிபெயா்க்கப்படுவது குறித்து கவிஞா் வைரமுத்து கூறுகையில், ‘இதன் மூலம் பாரதியாரின் கனவை முதல்வா் மு.க.ஸ்டாலின் நனவாக்கியுள்ளாா். தமிழ் எல்லையைக் கடப்பதால் எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT