சென்னை

2 நிமிஷம் போக்குவரத்தை நிறுத்தி தியாகிகளுக்கு மெளன அஞ்சலி

DIN

தியாகிகள் தினத்தையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை 2 நிமிஷம் போக்குவரத்தை நிறுத்தி, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாட்டின் சுதந்திர தின போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த ஜன.30- ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை போக்குவரத்து போலீஸாா் சாா்பில் அனைத்து சிக்னல்களிலும் திங்கள்கிழமை 2 நிமிஷம் போக்குவரத்தை நிறுத்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

312 சிக்னல்களில் காலை 11மணி முதல் 11.02 மணி வரை அனைத்து வாகனங்களையும் போக்குவரத்து போலீஸாா் நிறுத்தினா். பின்னா் 2 நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிக்னல்களில் நின்ற வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களில் இருந்தபடி மெளன அஞ்சலி செலுத்தினா். தியாகிகள் தினத்தையொட்டி, ஆண்டுதோறும் இந் நிகழ்ச்சியை பெருநகர காவல்துறை நடத்துவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT