சென்னை மெட்ரோ 
சென்னை

சென்னை விம்கோ நகரில் மெட்ரோ சேவை பாதிப்பு!

சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் மூலம் அலுவலகம், கல்லூரிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சென்று வருகின்றனர்.  

இந்நிலையில், சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலான நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ சேவை இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது.

விம்கோ நகர் - விம்கோ நகர் பணிமனைக்கு செல்லும் தடத்தில் மின் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி மெட்ரோ முதல் விம்கோ நகர் மெட்ரோ வரையில் ஒருவழிப்பாதை மெட்ரோதான் உள்ளது. இதனால், விம்கோ நகர் வரை 18 நிமிட இடைவெளியில் தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இதனால், விம்கோ நகர், திருவொற்றியூர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மின் விநியோக பிரச்னையை சரிசெய்யும் பணிகளில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் வழக்கமான சேவை தொடரும் என்று மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT