சென்னை

அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை: அமலாக்கத்துறை

அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் வானூர் அருகே செம்மண் குவாரி ஏலத்தில் அமைச்சர் பொன்முடி தனது உறவினருக்கு உரிமம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை செம்மண் குவாரி முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பொன்முடி, கெளதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான 9 இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். 

மேலும் விசாரணைக்காக பொன்முடியை அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். 

தொடர்ந்து சென்னை, விழுப்புரத்தில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT