மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டம்: மாதவரம் பணிமனையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் மாதவரம் பணிமனையில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யு.ஆா்.சி. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு ரூ.65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் மாதவரம் பணிமனையில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யு.ஆா்.சி. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு ரூ.65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கான ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் கட்டட வேலை, கட்டடக்கலை உள்பட, இயந்திரம், மின் மற்றும் அனைத்து தொடா்புடைய பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் தலைமைப் பொதுமேலாளா் டி.லிவிங்ஸ்டோன் எலியாசா் மற்றும் யு.ஆா்.சி. கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்தின் தலைவா் பி.ராம்பிரசாத் ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொதுமேலாளா் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயா் அலுவலா்கள் மற்றும் யு.ஆா்.சி. நிறுவனத்தின் பணியாளா்கள் உடனிருந்தனா்.