FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!

இலங்கை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பொதுத் துறை நிறுவனங்களுக்கு வேலை நாள்கள் குறைக்கப்பட்டது குறித்து...

Updated On : 16 மார்ச் 2026, 9:23 pm IST
இலங்கை பெட்ரோல் நிலையத்தில் காத்திருக்கும் மக்கள் - படம் - எக்ஸ்
பகிர்:

இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், துறைமுகம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து, பிற அனைத்துத் துறைகளும் வாரத்தின் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக இருக்கும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாகனங்களுக்கு கியூஆர் கோடு கட்டாயம் என நேற்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 16) வேலைநாள்கள் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேற்கு ஆசியாவில் நிலவிவரும் போர்ப்பதற்றம் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி இலங்கையிலும் பலதரப்பட்ட மக்கள் சமையல் எரிவாயுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிக்க வாகனங்களுக்கு கியூஆர் கோடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் வேலைநாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி மருத்துவத் துறை, சுங்கத் துறை, குடிநீர், துறைமுகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் மட்டுமே அனைத்து நாள்களும் இயங்கும் என்றும், மற்ற துறைகள் 4 நாள்கள் மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூர்களிலும் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் துறைகளும் இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

summary

Sri Lanka announces 4-day week for public sector to cut fuel use

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments