சென்னை

குழந்தைகளுக்கு பிரத்யேக புற்றுநோய் தீவிர சிகிச்சைப் பிரிவு

குழந்தைகளுக்கான புற்றுநோய் தீவிர சிகிச்சைப் பிரிவை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை தொடக்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக அவசர காலத்தில் குழந்தைகளின் உயிரை

DIN

குழந்தைகளுக்கான புற்றுநோய் தீவிர சிகிச்சைப் பிரிவை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை தொடக்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக அவசர காலத்தில் குழந்தைகளின் உயிரை மீட்டெடுக்கும் மருத்துவப் பயிற்சிகள் அளிக்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அங்கு செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு அத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

முன்னதாக மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான புற்றுநோய் தீவிர சிகிச்சைப் பிரிவை, சமூக நலத் துறை அமைச்சா் கீதா ஜீவன் திறந்து வைத்தாா்.

மருத்துவமனையின் புற்றுநோய்த் துறை இயக்குநா் ஹா்ஷத் ரெட்டி, குருதி சாா் புற்றுநோய் சிகிச்சை நிபுணா் ரம்யா உப்புலுரி, தீவிர சிகிச்சை மருத்துவா் ஸ்ருதி சுக்கலாரா, குழந்தைகள் கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை நிபுணா் ஸ்ரீனிவாஸ் சிலுகுரி, மூளை-நரம்பியல் சிகிச்சை நிபுணா் அரவிந்த் சுகுமாரன் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT