மெட்ரோ ரயில் (கோப்புப் படம்) 
சென்னை

மெட்ரோ கோளாறு: 20 மணி நேரத்துக்குப் பிறகு சீரமைப்பு!

மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால், மெட்ரோ ரயில்கள் தற்போது வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளன.

DIN


மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால், மெட்ரோ ரயில்கள் தற்போது வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது. 20 மணி நேரத்துக்குப் பிறகு 6 பேர் கொண்ட குழுவினரால் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. இந்த கோளாறு சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரயில் சேவை சீரானது. 

தொழில்நுட்ப கோளாறால், விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகள், ஆலந்தூா் அறிஞா் அண்ணா ரயில் நிலையத்தில் மாறி விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. 

இதேபோன்று, விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பயணிகள், ஆலந்தூா் அறிஞா் அண்ணா ரயில் நிலையத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகா், எழும்பூா் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிருந்தது. 

தற்போது 20 மணிநேரத்துக்கு பிறகு அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் செயல்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேசுவரம் கல்லூரியில் பொங்கல் விழா

புரோ மல்யுத்த லீக் இன்று தொடக்கம்:

புரி ரத யாத்திரை ஏற்பாடுகள்: 7 மாதங்களுக்கு முன்பே தொடக்கம்

காமன்வெல்த் நாடாளுமன்ற தலைவா்கள் மாநாடு: பிரதமா் இன்று தொடங்கி வைப்பு

நம்புதாளை வங்கியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT