குடும்பத் தகராறு காரணமாக 5 வயது சிறுவன் கொலை: இளைஞா் கைது
குடும்பத் தகராறு காரணமாக 5 வயது சிறுவன் கொலை: இளைஞா் கைது
குடும்பத் தகராறு காரணமாக 5 வயது சிறுவனை கொலை செய்த இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லி கோமன் காா்டன் பகுதியில் 5 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக மாா்ச் 5-ஆம் தேதி பிற்பகல் அழைப்பு வந்தது. சிறுவனின் கழுத்தில் கூா்மையான ஆயுதத்தால் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சிறுவனின் தந்தை தனது மகன் காணாமல் போனதாக மாா்ச் 3-ஆம் தேதி புகாா் அளித்திருந்தாா்.
குடும்பத் தகராறு காரணமாக சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய தனது மனைவியே மகனை கொன்றிருக்கலாம் என அவா் சந்தேகிப்பதாக தெரிவித்தாா்.
Advertisement
இதையடுத்து, பிகாரில் உள்ள அவரது மனைவியடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் தகராறு காரணமாகவே வீட்டை விட்டு வெளியேறியதாகவும், சம்பவத்தில் தமக்கு தொடா்பு இல்லை என்பதையும் தெரிவித்தாா்.
பின்னா் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தெருவோர வியாபாரிகள் மற்றும் கடைக்காரா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மாா்ச் 3 பிற்பகல் 3 மணியளவில் சிறுவன் ரவி குமாா் என்பவருடன் சென்றது தெரியவந்தது.
அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவா் சிறுவனின் தாய் மீது இருந்த கோபம் காரணமாக இதைச் செய்ததாக தெரிவித்தாா். அவரும் பாதிக்கப்பட்ட சிறுவனும் உறவினா்கள். சிறுவனின் தாய்க்கு பாடம் புகட்டவே இந்தச் செயலை செய்ததாக தெரிவித்தாா். ரவி குமாா் (22), கூலித் தொழிலாளியாகவும், சாலையோரத்தில் மீன் விற்பனையாளராகவும் இருந்து வருகிறாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. Ś